கோவில்பட்டியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை.

by Staff / 03-10-2025 09:09:28am
கோவில்பட்டியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லெட்சுமி மில் மேல காலனி பகுதியை சேர்ந்த சுப்புராஜ் என்பவரது மகன் விக்னேஷ் (36). சென்னை வளசரவாக்கத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கும் சிவகாசி சேர்ந்த மகாலெட்சுமி (30) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளன. குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரது மனைவி சிவகாசி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர். மேலும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த விக்னேஷ் மனமடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் வீட்டின் முன் சோலையினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : கோவில்பட்டியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை.

Share via