குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததாக புகார்: நயினார் கண்டனம்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவில், "திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்திருப்பதாக எழுந்திருக்கும் புகார் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து முதல்வர் எப்போது வாய் திறப்பார்? சட்டம் ஒழுங்கைச் சீரழித்து சமூக விரோதிகளின் அழிச்சாட்டியத்தை நிலைநாட்டுவது தான் திராவிட மாடல் ஆட்சியா? உடனடியாக தீவிர விசாரணை நடத்தி குற்றம் புரிந்த சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்றார்.
Tags :