தமிழ்நாட்டில் புதிதாக 8 துறைமுகங்கள்

தமிழ்நாட்டில் புதிதாக 8 இடங்களில் சிறிய அளவிலான துறைமுகங்களை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு (முகையூர், பனையூர்), மரக்காணம், கடலூர் (சிலம்பிமங்கலம்), மயிலாடுதுறை (வானகிரி), நாகை (விழுந்தமாவடி), தூத்துக்குடி (மணப்பாடு) மற்றும் கன்னியாகுமரியின் கடற்கரை பகுதியில் துறைமுகங்கள் அமைக்க அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு துறைமுகங்கள் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Tags :