தென்மாவட்டங்களில் ஆளுநர் சுற்றுப்பயணம்

தமிழக கவர்னர் ரவி நாளை முதல் நான்கு நாட்களுக்கு தென் தமிழகமான தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.
குறிப்பாக நாளை காலை தூத்துக்குடி விமானநிலையம் வரும் கவர்னர் எட்டயபுரத்தில் பாரதியார் இல்லத்திற்கு செல்கிறார் அதன் மறுநாள் இஸ்ரோ மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அதன் மறுநாள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
16ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சென்னை திரும்புகிறார்
என தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆளுநரின் வ்ருகையைமுன்னிட்டு பால;அத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துவருகின்றனர்.
Tags :