நடிகர் செவ்வாழை ராசு காலமானார்

by Staff / 18-05-2023 03:28:09pm
நடிகர் செவ்வாழை ராசு காலமானார்

பிரபல நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார். நடிகர் செவ்வாழை ராசு(70) பருத்திவீரன் படத்தில் ‘பிணந்தின்னி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதன்பின் மைனா, கந்தசாமி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது. இதனையடுத்து, அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள கோரையூத்து கிராமத்திற்கு உடல் எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. மேலும், இவரது இறப்பிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 

Tags :

Share via