அகில இந்திய காங்கிரஸ் 45 நாள் நாடு தழுவிய போராட்டம்
அகில இந்திய காங்கிரஸ் 45 நாள் நாடு தழுவிய போராட்டத்தை தொடங்க. உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக விக்சித் பாரத் ஜி ராம்ஜி என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்ததை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது.. பத்தாம் தேதி நாடு முழுவதும் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகங்களில் பத்திரிக்கையாளர் சந்திப்புகள் நடத்தப்பட்டது 11ஆம் தேதி மாவட்ட தலைமையகங்களில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் நடை பெறவும் ஜனவரி 12 இருந்து 29 வரை அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் சௌபால் எனப்படும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஜனவரி 30 வேலைக்கான உரிமையை வலியுறுத்தி வாழ்வு அளவில் அமைதியான முறையில் தர்ணா கூட்டங்கள் நடைபெறும் என்றும் பிப்ரவரி 7 லிருந்து 15 வரை மாநில தலைநகரங்களில் உள்ள சட்டமன்றங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும் பிப்ரவரி 16 இல் இருந்து 25 வரை போராட்டத்தின் இறுதி கட்டமாக நாடு முழுவதும் நான்கு முக்கிய பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகவும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வி பி ஜி ஆர் ஏ எம் ஜி சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் எம் ஜி என் ஆர் இ ஜி ஏ சட்டத்தை அதன் பழைய உரிமைகள் மற்றும் அதிகாரங்களுடன் மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் இந்த போராட்டத்தை பஞ்சாயத்து நகராட்சி மற்றும் மாவட்ட அளவில் முன்னெடுத்துச் செல்லுமாறு கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Tags :


















