1 மக்களவைத் தொகுதி மற்றும் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ல் இடைத்தேர்தல்.

by Editor / 05-11-2022 07:10:51pm
1 மக்களவைத் தொகுதி மற்றும் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு  டிசம்பர் 5-ல் இடைத்தேர்தல்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மறைவைத் தொடர்ந்து காலியான மெயின்புரி மக்களவைத் தொகுதி மற்றும் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் உள்ள ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முலாயம் சிங் யாதவ் வயது மூப்பு காரணமாக கடந்த அக்டோபர் 10ம் தேதி காலமானார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முகமது அசம்கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2019 ஆம் ஆண்டில், வெறுப்பு பேச்சுக்காக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அசம் கான், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

காங்கிரஸ் எம்எல்ஏ பன்வர்லால் சர்மா காலமானதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் உள்ள சர்தார்சஹர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஒடிசாவின் பதம்பூர், பீகாரில் குர்ஹானி மற்றும் சத்தீஸ்கரில் உள்ள பானுபிரதாபூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

 

Tags :

Share via