டிவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் பிரதமர் நரேந்திர மோடியை  பின் தொடர்ந்துள்ளார்.

by Editor / 11-04-2023 06:56:47am
டிவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் பிரதமர் நரேந்திர மோடியை  பின் தொடர்ந்துள்ளார்.


இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் ஆக்டீவாக செயல்படும் நபர். பிரதமர் மோடியை கிட்டத்தட்ட 8 கோடியே 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிவிட்டரில் பின் தொடர்கின்றனர். இந்திய அளவில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.

உலக அளவில் டிவிட்டரில் அதிக ஃபாலோயர்ஸை பெற்றவர்களின் பட்டியலில் எலான் மஸ்கும் முதல் இடத்தையும், பாரக் ஒபாமாவும் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். பாடகி ரெஹானா 10.8 கோடி ஃபாலோயர்களை பெற்று மூன்றாம் இடத்தையும் உலகின் அதிக ஃபாலோயர்ஸை பெற்ற முதல் பெண் என்ற இடத்தையும் பிடித்துள்ளார்.

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி அதன் உரிமையாளரானார். எலான் மஸ்க் ட்விட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் உலக அளவில் கவனம் பெற்று வருகிறார். சமீபத்தில் டிவிட்டரின் லோகோவான குருவியை மாற்றிவிட்டு தனது செல்லப் பிராணியான நாயின் படத்தை வைத்து அதிரடி காட்டினார்.

இந்த நிலையில் டிவிட்டர் உரிமையாளாரன எலான் மஸ்க் தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பின் தொடர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 13 கோடியே 40 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள எலான் மஸ்க் 194 பேரை மட்டுமே அவர் பின் தொடர்கிறார். ஆப்பிள் சிஇஓ டிம் குக் , மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா , இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆகியோரை தொடர்ந்து எலான் மஸ்க் பிரதமர் மோடியை பின் தொடர்ந்துள்ளார்.
 

 

Tags :

Share via