உணவு விஷமானதால் 4 மாணவர்கள் பலி

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் கைலாசப்பட்டினம் பகுதியில் ஆராதனா அறக்கட்டளை விடுதி உள்ளது. அங்கு நேற்று (ஆகஸ்ட் 18) காலை மாணவர்கள் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதல் உணவு விஷமானது. இதனால், 27 மாணவர்கள் நோய்வாய்ப்பட்டனர். வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் சிகிச்சை பலனின்றி 4 மாணவர்கள் உயிரிழந்தனர். மற்ற மாணவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
Tags :