ஹெலிகாப்டரில் மக்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம்

by Staff / 06-12-2023 01:28:15pm
ஹெலிகாப்டரில் மக்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம்

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வேளச்சேரி, தாம்பரம், தரமணி, வட சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை வெள்ளம் வடியாமல் பொதுமக்களை கடும் சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது. மாநகராட்சி சார்பில் மீட்புப் பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம் செய்யப்படுகிறது.

 

Tags :

Share via

More stories