காதலித்து திருமணம் செய்த பெண். வடமாநில நபருடன் கள்ளக்காதல் கொலையில் முடிந்த சோகம்.

விருத்தாசலம் பகுதியை சேர்ந்த சரஸ்வதி இலங்கையை சேர்ந்தகணேச மூர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.சரஸ்வதிக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர்.அவர்கள் கணவன் கணேச மூர்த்தியோடு விருத்தாசலத்தில் வசித்துவரும் நிலையில் சென்னை கொளத்தூரில் சரஸ்வதி பாலியல் தொழில் செய்து வந்ததாக்க கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் தங்கியிருந்த வீட்டில் அந்த பெண் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் அந்தப்பகுதியில் பதிவான விடியோக்காட்சிகளை வைத்து உத்திரபிரதேச மாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் புதிய பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட சரஸ்வதி, தனியார் துணி சலவைக்கடையில் 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றிவந்த வடமாநில நபரான அன்சாரிக்கும் சரஸ்வதிக்கும் தொடர்பு ஏற்பட்டு அன்சாரி யோடு சரஸ்வதி வேறு வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் தனக்கு திருமணம் ஆனதை மறைத்ததோடு, ஆண் நண்பர்கள் பலருடன் பழகியதையும் சரஸ்வதி மறைத்ததை கண்டுபிடித்த அன்சாரி அவரை கொலை செய்திருக்கிறார்.
Tags : A woman who fell in love and married. A love affair with a man from the northern state ended in tragedy and murder