சானிட்டரி நாப்கின்.. போலி வீடியோ பரப்பிய இருவர் மீது வழக்கு

சானிட்டரி நாப்கினில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தியின் படம் இருப்பதாக போலி வீடியோ பரப்பிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகாரில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே காங்கிரஸ் சார்பில் சானிட்டரி நாப்கின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன் பேடுகளில் ராகுலின் படம் அச்சிடப்பட்டுள்ளதாக போலி வீடியோவை சிலர் பரப்பியுள்ளனர். இது தொடர்பாக நடிகர்கள் ரத்தன் ரஞ்சன், அருண் கோசில் மீது தெலுங்கானா, கர்நாடகாவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Tags :