பிரபல சர்வதேச வீரர் சாலை விபத்தில் பலி
பிரபல சைக்கிள் பந்தய வீரர் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
சைக்கிள் பந்தய வீரர் என்ற உடனடியாக அனைவரின் நியாபகத்திற்கு வருபவர் கிறிஸ் அங்கெர் ( Chris Anker). டென்மார்க்கை சேர்ந்த இவர் சைக்கிள் பந்தய போட்டிகளில் பல்வேறு பரிசுகளையும் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.37 வயதான இவர் சைக்கிள் பந்தயத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் உலக சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டி குறித்து ஊடகத்தில் வர்ணனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.இந்த நிலையில் இப்பணிக்காக அவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தப்போது வேன் ஒன்று அவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்ததில் கிறிஸ் அங்கெர் உயிரிழந்தார். கிறிஸ் அங்கெர் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு சைக்கிள் வீரர், வீராங்கனைகள் உள்பட பல்வேறு தரப்பினரும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags :


















