ஈரான்-பஹரைனில் உள்ள அலுமினிய உற்பத்தி ஆலைகளையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது

by Admin / 30-03-2026 09:01:46am
 ஈரான்-பஹரைனில் உள்ள அலுமினிய உற்பத்தி ஆலைகளையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது

மத்திய கிழக்கு பதட்டங்களுக்கு மத்தியில் ஈரான், இஸ்ரேலிய மற்றும் வளைகுடா நாடுகளில் முக்கியமான எரிசக்தி மற்றும் தொழில் முறை கட்டமைப்புகள் மீது நேற்று மாலை தாக்குதல் நடத்தியது அ.தில் குவைத்தின் மின் உற்பத்தி மற்றும் கடல் நீர் சுத்தகரிப்பு நிலையத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் அங்கிருந்த ஒரு கட்டிடம் சேதம் அடைந்ததோடு அங்கு பணிபுரிந்த இந்திய தொழிலாளர் ஒருவரும் உயிர் இழந்தார். தெற்கு இஸ்ரேலில் உள்ள நீயோட்டு ஹோவாவ் ,மக்தேசிம் போன்ற முக்கிய இரசாயன தொழிற்சாலைகள் அமைந்துள்ள மண்டலங்கள் மீது ஈரானிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின. அதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் குவைத் மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹரைனில் உள்ள அலுமினிய உற்பத்தி ஆலைகளையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது .இஸ்ரேலில் உள்ள சில மின் உற்பத்திய நிலையங்கள் மீதும் ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளது.

 

Tags :

Share via

More stories