சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசார்கள் தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளது.- மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்

by Admin / 30-03-2026 09:29:14am
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசார்கள் தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளது.- மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்

இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசார்கள் தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளது. அன்றைய ஆய்வாளர் ஸ்ரீதர் சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ் மற்றும் பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன் மற்றும் சாமித்துரை காவலர்கள் முத்துராஜ் ,செல்லத்துரை ,தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வெயிலு முத்து ஆகிய ஒன்பது பேரும் கொலை குற்றவாளிகளாக நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்துஇன்று அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட உள்ளது.   2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது கடையை உரிய நேரத்திற்கு மேல் திறந்து வைத்ததாக கூறி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல் நிலையத்தில் கொடூரமான தாக்குதலு உட்படுத்தப்பட்டு உயிரிழந்தனர். இந்த வழக்கில் சமீபத்தில் மதுரை அமர்வு நீதிமன்றம் ஒன்பது பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்களுக்கான தண்டனை விவரத்தை அறிவிக்கின்றது. தண்டனை விவரங்களை அறிவிப்பதற்கு முன்னதாக  குற்றவாளிகளின் உடல் நிலை சொத்து விவரங்கள் மற்றும் ஊதிய சான்றிதழ்களை  சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் அவர்களுக்கு அரசு ராஜாசி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories