அர்ஜுன் கட்டியட ஆஞ்சநேயர் கோவில்

by Editor / 24-07-2021 05:59:44pm
அர்ஜுன் கட்டியட ஆஞ்சநேயர் கோவில்

சென்னை போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் 'அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம்: என்ற கோவில் அர்ஜுன்கட்டியுள்ளார். இந்தக் கோவிலின் கும்பாபிஷேக விழா சமீபத்தில் (02.07.2021) நடைபெற்றது. ஶ்ரீ ராமர், விநாயகர், சன்னதிகளும் உள்ளன. ஶ்ரீ ஆஞ்சநேயர் சாந்தமாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் இந்த ஒற்றைக்கல் சிலை 180 டன் எடையுடையதாம்.

கர்நாடக மாநிலம் கொய்ரா கிராமத்தில் செய்யப்பட்டு அங்கிருந்து பெரிய டிரக்கில் சென்னை கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகப் பெரிய விழாவாக நடைபெற வேண்டிய இந்த கும்பாபிஷேகம் மிகவும் எளிமையாக நடந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் துணைவியார் துர்கா ஸ்டாலின் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் பெற்றார்.

 

Tags :

Share via