ரயில் விபத்து - ஆய்வு செய்ய ஒடிசா செல்கிறார் பிரதமர்

ஒடிசாவில் ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் நடைபெறும் மீட்புப் பணிகளை பிரதமர் மோடி இன்று நேரில் சென்று பார்வையிடுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் பிரதமர் நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார். ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் மற்றும் ராணுவத்தின் பொறியியல் மற்றும் மருத்துவக் குழுக்கள் ஒடிசா விரைந்துள்ளனர். விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்த நிலையில், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
Tags :