பட்டாசு தொழிற்சாலையில் ஆய்வு செய்த முதலமைச்சர்.
விருதுநகர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் கள ஆய்வு செய்யச் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.முன்னதாக விருதுநகர் விருந்தினர் மாளிகை அருகில் விருதுநகர் மாவட்ட அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமையிலான திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து கன்னிச்சேரிபுதூர் பட்டாசு ஆலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அங்கிருந்த பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு, தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து முதலமைச்சர் கேட்டு அறிந்தார்.
Tags : பட்டாசு தொழிற்சாலையில் ஆய்வு செய்த முதலமைச்சர்.