மதுரை - மானாமதுரை மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

by Editor / 02-12-2021 06:45:16pm
மதுரை - மானாமதுரை மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

மதுரை - மானாமதுரை இடையேயான 47 கிலோமீட்டர் அகல ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு தயாராக உள்ளது. இந்த மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் தற்போது சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பயணிகள் ரயில் இயக்குவதற்கு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஆய்விற்குப் பின்பான அனுமதி தேவைப்படுகிறது. எனவே இந்த பாதையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (05.12.2021) அன்று பெங்களூரு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ஆய்வு மேற்கொள்கிறார். மதுரையில் இருந்து காலை 09.30 மணிக்கு துவங்கும் ஆய்வு மானாமதுரையில் மதியம் 01.30 மணிக்கு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு மானாமதுரையி லிருந்து  மதுரை வரையிலான ரயில் வேக சோதனை ஓட்டம் மதியம் 02.30 மணிக்கு துவங்கி மதுரையில் மாலை 03.15 மணிக்கு நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via