2 நாட்களாக சிக்கித் தவிக்கும் நடிகை : அரசுக்கு சரமாரி கேள்வி

மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் 2 நாட்களாக சிக்கித் தவிப்பதாக, நடிகை அதிதி பாலன் X பக்கத்தில் கொந்தளித்துள்ளார்.மழையால் சென்னை மூழ்கியுள்ளது. இந்தநிலையில் அருவி பட நடிகை அதிதி பாலான் தனது X தளத்தில்"தங்கள் பகுதியில் எந்தவொரு மீட்பு பணிகளும் நடக்கவில்லை. மழைவிட்டு பல மணிநேரங்கள் ஆகியும், மயிலாப்பூர் மக்களை சென்னை மாநகராட்சி கண்டு கொள்ளவில்லை. இறந்த விலங்குகள் தண்ணீரில் மிதக்கின்றன. மக்கள் இங்கே சிக்கி தவிக்கின்றனர். தமிழக அரசு எங்கே போனது" என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். சினிமா பிரபலங்கள் அரசை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
Tags :