சென்னையில் இன்று அதிகாலை 3 மணிமுதலேமழை பெய்து வருகிறது

by Editor / 07-10-2022 08:29:25am
சென்னையில் இன்று அதிகாலை 3 மணிமுதலேமழை பெய்து வருகிறது

சென்னையில் நேற்று இரவு முதலே வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நகரின் ஒருசில பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை 3 மணியளவில், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, கோடம்பாக்கம், காமராஜர் சாலை, டி நகர், மந்தைவெளி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, அடையார், பட்டினம்பாக்கம், ராயப்பேட்டை, சேப்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, பட்டினம்பாக்கம், மெரினா, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், பல்லாவரம், பம்மல், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

 

Tags :

Share via

More stories