நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் அதிரடி அறிவிப்புக்கள் வெளியாக வாய்ப்பு.

by Editor / 01-09-2023 10:23:08am
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் அதிரடி அறிவிப்புக்கள் வெளியாக வாய்ப்பு.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார். 5 நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இது 17வது மக்களவையின் 13வது கூட்டத்தொடர் மற்றும் ராஜ்யசபாவின் 261வது அமர்வு ஆகும். எதிர்க்கட்சிகள் கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெறும் போது இந்த கூட்டத்தொடர் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 10க்கும் மேற்பட்ட முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்றும் தேர்தலை மையம் வைத்து பல்வேறு அதிரடி அறிவிப்புக்கள் வெளியாகலாம் என தெரிகிறது.
 

 

Tags : நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் அதிரடி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.

Share via