காட்டுயானை தாக்கி முதியவர் உயிரிழப்பு.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மசினகுடி பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் நடராஜன். இவர் நேற்று புகழ்பெற்ற பொக்காபுரம் கோவிலுக்கு சென்று திரும்பி வரும் வழியில் காட்டு யானை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் நடராஜனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இதேபோல் தொடர்ந்து காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் எனவே நகரப் பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றிவரும் காட்டு யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் அகழிகள் வெட்ட வேண்டும் என்பதும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Tags : காட்டுயானை தாக்கி முதியவர் உயிரிழப்பு.



















