நாமக்கல், கரூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் நில அதிர்வு

by Editor / 14-12-2021 01:55:04pm
நாமக்கல், கரூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் நில அதிர்வு

கரூரில் ஜவகர் பஜார், தான்தோன்றி மலை, லைட் ஹவுஸ் கார்னர், கருப்புக்கவுண்டன் புதூர் பகுதிகளில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. கரூர் நகர பகுதியில் உள்ள உணவகத்தில் உள்ள கண்ணாடிகள் உடைந்து விழுந்தது. இதனால் வீடுகளை விட்டு அலறடித்துக்கொண்டு பொதுமக்கள் வெளியே வந்தனர். இதேபோல் நாமக்கல்லில் திடீரென பலத்த சப்தத்துடன் கட்டிடங்கள் குளிங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.

 

Tags :

Share via