தென்காசி,திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

by Staff / 13-10-2023 07:26:15am
தென்காசி,திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் 18ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

Tags : தென்காசி,திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

Share via