மனைவிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த கணவர் தாய் சேய் உயிரிழந்ததால் கணவர் கைது

by Editor / 20-06-2022 11:48:19am
மனைவிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த கணவர் தாய்  சேய் உயிரிழந்ததால் கணவர் கைது

சேலத்தில் வீட்டிலே மனைவிக்குப் பிரசவம் பார்த்து அதில் உயிரிழந்த தாயையும் சிசுவையும் புதைத்த வரை போலீசார் கைது செய்தனர். தாசநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த பார்வதி அஜித்குமார் தம்பதிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் நான்காவது பார்வதி கற்பம் தரித்தால் நிறைமாத கர்ப்பிணிக்கு பார்வதிக்கு பேறுகால வலி ஏற்பட்ட நிலையில் வீட்டில் வைத்தே கணவர் அஜித்குமார் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. தம்பதிக்கு பெண் சிசுஇறந்தே  பிறந்ததும் சிறிது நேரத்தில் வலிப்பு ஏற்பட்டு பார்வதியும் இறாந்ததாக கூறப்படுகிறது.தாய்  உடலையும் சிசு புதைத்த இடம் அருகே அஜித்குமார் வைத்ததாக சொல்லப்படுகிறது ஊர் மக்கள் அளித்த புகாரில் போலீசார் இரு உடல்களையும் கைப்பற்றி அஜீத் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via