பாஜகவுக்கு நடுக்கம் வந்துவிட்டது - மு.க.ஸ்டாலின்

by Staff / 13-09-2023 12:44:52pm
பாஜகவுக்கு நடுக்கம் வந்துவிட்டது - மு.க.ஸ்டாலின்

பாஜகவின் திசைதிருப்பும் தந்திரத்தை திமுகவினர் முறியடிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியா கூட்டணி உருவான பிறகு பாஜகவுக்கு நடுக்கம் வந்துவிட்டது. பாஜக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. அவர்களுக்கு முடிவுரை எழுதி இந்தியா கூட்டணியை அரியணையில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதை உணர்ந்த பாஜக ஆட்சியாளர்கள், இப்போது நாட்டின் பெயரையே மாற்றத் துணிந்து விட்டார்கள். நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்கள். இந்தியா முழுமைக்குமான வெற்றிக்கான அடையாளமாக இது அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via