பிரதமரை நேரில் சந்தித்த தமிழ்நாடு ஆளுநர்

by Editor / 10-07-2021 07:42:57pm
பிரதமரை நேரில் சந்தித்த தமிழ்நாடு ஆளுநர்

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நேற்று தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். இன்று காலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவர் சந்தித்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் முதல் முறையாக பிரதமர் மோடியை நேரில் சந்திப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

 

Tags :

Share via

More stories