எச்டிஎப்சி முதலீட்டாளர்கள் சர்வதேச சந்தையில் முதலீடு செய்யும் வகையில் புதிய நிதி திட்டம் அறிமுகம்

by Editor / 22-09-2021 04:20:09pm
எச்டிஎப்சி முதலீட்டாளர்கள் சர்வதேச சந்தையில் முதலீடு செய்யும் வகையில் புதிய நிதி திட்டம் அறிமுகம்


இந்தியாவின் மீச்சுவல் பண்ட் நிறுவனங்களில் ஒன்றான எச்டிஎப்சி மீச்சுவல் பண்ட் முதலீட்டு மேலாளர்களின் நிறுவனமான எச்டிஎப்சி சொத்து மேலாண்மை கம்பெனி, முதலாவது சர்வதேச சந்தைகளின் குறியீட்டில் புதிய நிதியின் நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது. இது, 5 கண்டங்கள், 23 முன்னணி நாடுகளின் சந்தைகள், 1500க்கும் மேற்பட்ட தொகுப்புகள் மற்றும் 14 கரன்சிகள், சர்வதேச பொருளாதாரத்தில் 56% மற்றும் 50% உலக சந்தை முதலீடுகளின் அடிப்படையாக கொண்ட ஒரே நிதி திட்டம் ஆகும்.


உலக அளவில் முன்னேறிய நாடுகளின் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட பல்துறை முதலீட்டை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது பொருத்தமாக அமையும். உலக அளவில் 510 பில்லியன் டாலர் மதிப்புமிக்க சொத்து மேலாண்மை செய்து வரும் கிரெடிட் சுஸ்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த நிதி துவக்கப்படுகிறது. சர்வதேச குறியீட்டு அளவீடான எம்எஸ்சிஐ செயல்பாட்டின் அடிப்படையில் கிரெடிட் சுஸ்சி இன்டெக்ஸ் பண்ட் மற்றும் ஈடிஎப் களில் இந்த முதலீடுகள் இருக்கும்.
சர்வேதச அளவில் பிரபலமான எம்எஸ்சிஐ இன்டெக்ஸ், 23 வளர்ந்த நாடுகள், 1500க்கும் மேற்பட்ட தொகுப்புகள் மற்றும் 85% சந்தையில் வேகமாக கைமாறும் மூலதன பங்குகளை கொண்ட குறியீடு ஆகும்.


எச்டிஎப்சி டெவலப்டு வேர்ல்டு இன்டெக்ஸ் பண்ட் ஆப் பண்ட்ஸ், உள்நாட்டு பங்கு முதலீடுகள் என்ற எல்லையையும் தாண்டி, உலகின் வளர்ச்சி பெற்ற நாடுகளின் உள்ள நிறுவனங்களின் பங்கு சந்தை பயன்களை பெற முதலீட்டாளர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.


எச்டிஎப்சி ஏஎம்சியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் நவ்நீத் முனட் இந்த நிதி குறித்து பேசுகையில், "முதல் முறையாக இது போன்ற நிதியை அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். வளர்ந்த நாடுகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு இது ஒரு வழியாக உள்ளது. இந்த ஒரே நிதியானது, நாடுகள், கரன்சிகள், பல்துறைகள், அளவீடு மற்றும் தன்மையிலும் பங்கேற்க வாய்ப்பளிக்கிறது. சர்வதேச வரிகள் மற்றும் கட்டணங்களிலும் மிகவும் செயல்திறன் வாய்ந்ததாக உள்ளது. வளர்ந்த நாடுகளின் சந்தையுடன், இந்திய சந்தையானது குறைவான தொடர்புகளைக் கொண்டதாக உள்ளது. இந்த நிதி ஒரு ஆரோக்கியமான பல்நோக்கு முதலீட்டுத் திட்டமாக இருக்கும்," என்றார்.

 

Tags :

Share via