மல்லிகார்ஜுன் கார்கே உடன் இந்திய கூட்டணி தலைவர்கள் சந்திப்பு

by Staff / 03-09-2023 02:43:23pm
மல்லிகார்ஜுன் கார்கே உடன் இந்திய கூட்டணி தலைவர்கள் சந்திப்பு


மத்திய அரசு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு திட்டம் குறித்த நிலவரங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும். இந்த சூழலில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உடன் 28 எதிர்க்கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் முக்கிய முடிவுகளை எடுக்கும்.

 

Tags :

Share via

More stories

Logo