முன்னாள் அமைச்சரின் உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

by Staff / 20-09-2023 01:10:32pm
முன்னாள் அமைச்சரின் உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் இந்திரகுமாரியின் நோமுக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கடந்த 1991 -96-ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவா் வெங்கடகிருஷ்ணன். இந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 73 லட்சத்து 78 ஆயிரம் சொத்து சேர்த்ததாக வெங்கடகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மஞ்சுளாவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி இருவரையும் விடுதலை செய்து, 2012-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், வெங்கடகிருஷ்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மஞ்சுளாவுக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், கீழமை நீதிமன்றத்தில் சரணடைய அக். 25-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டாா்.

 

Tags :

Share via