சிறுமிக்கு பாலியல் தொல்லை, முதியவருக்கு 10 ஆண்டு சிறை

by Staff / 23-12-2023 12:38:44pm
சிறுமிக்கு பாலியல் தொல்லை, முதியவருக்கு 10 ஆண்டு சிறை

திருவண்ணாமலை: தச்சம்பட்டை அடுத்த பழையனுார் கிராமத்தை சேர்ந்தவர் குள்ளன் (72). கடந்த 2022 ஜூன், 29ஆம் தேதி, விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கிச் சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். சிறுமி கூச்சலிட்டதையடுத்து, அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டனர். தப்பியோடிய குள்ளனை, போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், நீதிபதி பார்த்தசாரதி, குற்றவாளி குள்ளனுக்கு, 10 ஆண்டுகள் சிறை, ரூ.4,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரைத்தார்.

 

Tags :

Share via
Logo