குப்பைகளை தூர்வாரிய முதலமைச்சர்.. யோகி ஆதித்யநாத்

by Staff / 27-02-2025 12:55:36pm
குப்பைகளை தூர்வாரிய முதலமைச்சர்.. யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் அரயில் காட் பகுதியில் முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். கடந்த 45 நாட்களாக நடைபெற்ற மகாகும்பமேளாவில் சுமார் 65 கோடி பேர் புனித நீராடியதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்றுடன் கும்பமேளா நிறைவடைந்த நிலையில், பாஜகவினர், இந்து அமைப்புகள், அரசுத்துறையினர் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று காலை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முகக்கவசம், கையுறை அணிந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார். 

 

Tags :

Share via