15 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோவை எடுத்து விற்ற கணவன்,மனைவி கைது.

கேரளா மாநிலம் குளத்துப்புழாவில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை விற்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர். டியூஷன் என்ற பெயரில் வீட்டுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்யப்பட்டார். இந்தக் காட்சிகள் ரூ.1,500 வரை விற்கப்பட்டது. கஞ்சிரோட் மலையைச் சேர்ந்த விஷ்ணு, அவரது மனைவி ஸ்வீட்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான சிறுமியை வீட்டிற்கு வரவழைத்து விஷ்ணு பலாத்காரம் செய்துள்ளார். இதனை அவரது மனைவி ஸ்வீட்டி தனது மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். இன்ஸ்டா மூலம் வீடியோக்களை வாங்கியவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
Tags :