இளையத்தலைமுறைக்கு போட்டியாக மூதாட்டிகளும் போட்டி

by Editor / 05-02-2022 12:11:38pm
இளையத்தலைமுறைக்கு போட்டியாக மூதாட்டிகளும் போட்டி

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நான்காம் தேதியான நேற்றுடன் முடிவடைந்தது.இந்த நிலையில் 5 ஆம் தேதியான இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில்  நடைபெற்று வருகின்றன. மேலும் இந்தத் தேர்தலில் ஏராளமான கிராமத்துப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் சுயேட்சைகளாக போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் இளைய தலைமுறைக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணம் 60 வயதை கடந்த மூதாட்டிகளும் தமிழகத்திலுள்ள பல்வேறு பகுதிகளில்  வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.தமிழகத்தில் தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் புதிய அனுபவங்களை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இளையத்தலைமுறைக்கு போட்டியாக மூதாட்டிகளும் போட்டி
 

Tags : Grandmothers compete to compete with the younger generation

Share via