தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,இணை அமைச்சர் முருகன் ஆகியோர் மீது புகார்

by Editor / 18-04-2022 07:51:52pm
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,இணை அமைச்சர் முருகன் ஆகியோர் மீது புகார்

 தமிழக காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபுவை  அவரது அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்  வன்னியரசு,மாநில செய்தி தொடர்பாளர் கு.கா.பாவலன், மாநில வழக்கறிஞர் அணிச் செயலாளர் பார்வேந்தன் உள்ளிட்ட கட்சியின்பொறுப்பாளர்கள் சந்தித்து கட்சியின் நிறுவனத்தலைவர் திருமாவளவன்  கடந்த 14.04.2022,அன்று கோயம்பேட்டில் கலந்துகொண்ட,  புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பிறந்த தின "சமத்துவ நாள்" நிகழ்வில் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்ட பாஜக குண்டர்களை உடனடியாக கைது செய்யதிடவும்,  அந்த வன்முறையை திட்டமிட்டுத் தூண்டிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக ஒன்றிய இணை அமைச்சர்  எல்.முருகன் ஆகியோர் மீது  வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து தமிழகத்தை வன்முறைக் களமாக மாற்றிட  முயலும் பாஜகவின் சூழ்ச்சியை தடுத்து நிறுத்திடவேண்டுமென  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  சார்பில் புகார்மனு அளிக்கப்பட்டது.விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் தமிழக  காவல்துறைத்தலைவர் சைலேந்திரபாபு  விடம் மனுவை வழங்கினர்.
 

 

Tags : Complaint against Tamil Nadu BJP leader Annamalai and Joint Minister Murugan

Share via