நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் மீது பற்று உண்டு காங்கிரசுடன் இணைந்து பணியாற்றுவார்- மகளிர் காங்கிரஸ் தலைவர்

by Editor / 22-08-2024 12:54:07am
நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் மீது பற்று உண்டு காங்கிரசுடன் இணைந்து பணியாற்றுவார்- மகளிர் காங்கிரஸ் தலைவர்

நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் மீது பற்று உண்டு எனவும் அவர் விரைவில் காங்கிரசுடன் இணைந்து பணியாற்றுவார் என தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் நம்பிக்கை.

தென்காசி மாவட்டம் மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மத நல்லிணக்க ஒற்றுமை நடை பயணத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் தென்காசிக்கு வருகை தந்திருந்த நிலையில் நடைபயணமானது தென்காசி பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை சிந்தாமணி பகுதியில் நிறைவடைந்தது. முன்னதாக மத மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூவர்ண கலர் பலூன்கள் பறக்க விடப்பட்டன.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசினா சையத் நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் கட்சியின் மீது பற்று உள்ளதாகவும் எனவே அவர் கூடிய விரைவில் இணைந்து பணியாற்றுவார் என நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Tags : மகளிர் காங்கிரஸ் தலைவர்

Share via

More stories