தென்காசியில் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ள சூரியகாந்தி மலர்கள்...

by Editor / 22-08-2024 12:52:12am
தென்காசியில் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ள சூரியகாந்தி மலர்கள்...

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை, சுந்தரபாண்டிபுரம், ஆய்க்குடி உள்ளிட்ட பகுதிகளில் வருடம் தோறும் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை மூன்று மாத காலங்கள் சூரியகாந்தி மலர் பயிரிடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடம் தற்போது சூரியகாந்தி மலர் சுந்தரபாண்டியபுரம், சாம்பவர்வடகரை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ளது. 

இந்தப் பகுதி முழுவதும் ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலத்தில் சூரியகாந்தி பயிரிட்டு தற்பொழுது அறுவடைக்குத் தயாரான நிலையில், சூரியகாந்தி பூவின் வளர்ச்சி அந்தப் பகுதியில் கண்ணைக் கவரும் ரம்மியமான காட்சியாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்தப் பகுதி முழுவதும் விவசாயிகள், சூரியகாந்தி பூவை ஏராளமாகப் பயிரிடுவது வழக்கம்.

கடந்த சில வருடங்களாக குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்களைக் கவரும் சூரியகாந்திபூக்கள் பயிரிடப்பட்டுள்ள பகுதிகளைத்தேடி குவிவது வழக்கமாக இருந்துவருகிறது.மேலும் சூரியகாந்திபூக்கள் பயிரிடப்பட்டுள்ள வயல்வெளிகளை காண மக்கள் கூட்டம் அதிகரித்துவருவதால் சுற்றுலா தளங்களாக மாறி வருகிறது. 

அந்த வகையில் இந்த வருடம் சூரியகாந்தி பூக்கள் கம்புளி, சாம்பவர் வடகரை, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் தொடங்கியுள்ளது.

இதனால் சூரியகாந்தி பூக்கள் பயிரிடப்பட்டுள்ள வயல்வெளி சாலைகளில் ஓரத்தில் சாலையோர வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தற்காலிக கடைகள் அமைத்து சுற்றுலாப் பயணிகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

 

Tags : தென்காசியில் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ள சூரியகாந்தி மலர்கள்...

Share via