உதயநிதிக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தான் எடுத்துக்கொண்ட பொறுப்புகளில் குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்து காட்டியவர் அன்புத் தம்பி உதயநதி. தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், திமுகவின் இளைஞரணிச் செயலாளராகவும் திறம்படச் செயலாற்றி வரும் தம்பிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Tags :