கடன் அட்டைகளை- கிரெடிட் கார்டுகளை வாங்கச் சொல்லி தினமும் பல்வேறு தொலைபேசி அழைப்புகள்

by Admin / 02-04-2023 09:49:10am
கடன் அட்டைகளை- கிரெடிட் கார்டுகளை வாங்கச் சொல்லி தினமும் பல்வேறு தொலைபேசி அழைப்புகள்

 கடன் அட்டைகளை, கிரெடிட் கார்டுகளை வாங்கச் சொல்லி தினமும் பல்வேறு தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன . கடன் அட்டை என்பது பணக்காரர்களுக்கும் பெரும் நிறுவனத்தை நடத்தி வரும் தொழில் அதிபர்களுக்கும் அது ஒரு சமூக அந்தஸ்தாகவும் பாதுகாப்பாகவும் இருக்கின்றது. ஆனால், சராசரியாக, மாதச் சம்பளம் வாங்குகிறவர்களுக்கு, இந்த கடன் அட்டை  என்பது  ஒரு பெரும்  சுமையாக  மாறி விடும்  மாறிக்கொண்டிருக்கிறது.  கையில் காசு   இல்லாட்டா  விட்டாலும் இல்லாவிட்டாலும் பொருளை  வாங்கக்கூடிய  ஆசையை தூண்டிவிடுகிறது. இந்த கடன்  அட்டைகள், நாளை நமக்கு பணம் வரும் அதன் மூலமாக  இந்த  கடன்களை அடைத்து விடலாம் என்று  நம்பிக்கையோடு கடன்களை வாங்குகிறவர்கள் ,அவர்களுக்கு திடீரென்று வேறு நிலைகளில் செலவுகள் வரும் பொழுது மூச்சு  திணறிப் போய் விடுகிறார்கள். அப்பொழுது, இந்த கடன் அட்டையில் வாங்கிய பொருளுக்கான  தவணைகளை கட்ட தவறுகிற பொழுது அதற்கான வட்டி பன்மடங்காக பெருகி விடுகிறது .சராசரியாக மாத சம்பளம் வாங்குகிறவர்கள்  இந்த கடன் அட்டைகளை தவிர்ப்பது நல்லது. குதிரையின் மீது நாம் சவாரி செய்ய வேண்டுமே தவிர குதிரை  நம் மீது சவாரி செய்யக் கூடாது. கையில் காசு இருந்தால் ,பணம்  நம்மிடம் இருந்தால், நாம் எஜமான். பணம் இல்லாமல், ஒரு பொருளை நாம் அட்டைகள் வழியாக  வாங்குகிறோம் என்றால், அவை,  நமக்கு அட்டைகளாக நம் உடம்புக்குள்ளே புகுந்து நம்மளுடைய ரத்தத்தை  உறிஞ்சி கொண்டிருக்கும். எந்த ஒன்றையும் நாம் யோசித்து தான் செயல்பட வேண்டும் .கடன் வாங்கி பொருட்களை சேர்ப்பவர்கள் கூடவே நிம்மதியையும் இழக்க கூடிய ஒரு சூழல் உருவாகும். ஒவ்வொரு தேவையும் நம்மளுடைய உழைப்பின் வழியாக வரக்கூடிய பணத்தை வைத்துத்தான் ஈடு கட்ட வேண்டுமே தவிர ,அந்த முதலீட்டில் இருந்து தான் நாம் ஒன்றை தொடங்க வேண்டுமே தவிர, வங்கிகள்  தரக்கூடிய கடன்  அட்டைகளை வைத்துக் கொண்டு நாம் எந்த ஒரு முன்னெடுப்புகளை செய்தாலும், அது நம்மளுடைய தொடர் பயணத்தில் ஒரு மிகப்பெரிய ஒரு சருக்களை உருவாக்கும் என்பது உண்மை. அதனால், எதற்காக  இந்த கடன் அட்டைகளை வாங்குகிறோம் என்பதை நாம் முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் கடன் அட்டைகளை வைத்துக்கொண்டு தான் எல்லா பொருள்களையும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது முதலாளித்தவ சி ந்தனையினுடைய ஒரு வெளிப்பாடு. கடன் கொடுக்கும் நிறுவனங்கள் பெரும்பான்மை மக்களை கடனாளிகளாக வைக்க முயல்கின்றன..அப்பொழுதுதான்​​ அவர்கள் எஜமானா்களாக இருக்கமுடியும்.. கடன் வாங்குகிறவர்களும் ஒரு அடிமை மனநிலையில் தான் இருப்பார்கள் .பாலியல் ரீதியான ஒ ரு தூண்டுதலும்  மது போன்ற போதைக்கு அடிமையாகும் குட் கா ,பான் ப்ராக், கஞ்சா ,அபின்  போன்ற போதைப் பொருளுக்கு ஆளாகிறவர்களும் என்றைக்கும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவது என்பது கடினம். கடன் வாங்கியவர்களும் அப்படித்தான். கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்பர் கம்பராமாயணத்தில் குறிப்பிடுவது இங்கு நாம் கவனிக்கத்தக்கது. கடன் என்பது நம் கண்ணுக்குத் தெரியாமலே நம் உடம்புக்குள் புகுந்த ஒரு வைரஸ் ஒரு பாக்டீரியா. அது நம் உடம்பை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து தின்றுவிடும். நம் ரத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக உறிந்து சக்கையாக மாற்றி விடும்.  நாகரீக உலகத்தில்,  விளம்பரங்களின்  கவர்ச்சிகரமான  காட்சிகளால்  நாம் ஈர்க்கப்பட்டு,. ஒவ்வொரு பொருளையும் வாங்கி வாங்கி வீட்டில் குவித்து கொண்டிருக்கிறோம். கடன் அட்டைகளால் அட்டைகளால் வாங்கப்படுகின்ற பொருளுக்கு கொடுக்கப்படுகின்ற அவகாசத்துக்குள் நாம் பணத்தை செலுத்தி விடலாம் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், கட்ட முடியாத சூழலில்- முடியா த பட்சத்தில், அது நமக்கு மிகப்பெரிய ஒரு சுமையாக மாறி நம்மை மட்டும் இல்லாமல் நம்மை சார்ந்து இருக்கின்ற  குடும்ப உறுப்பினர்களையும் அதுஆட்கொள்ளும்; ஆட்கொள்கிறது கடன் அட்டைகள் எனும்.ஆக்டோபஸ் கரங்களால்,  நம் கழுத்தை மட்டும் அல்ல. உடம்பின்  அனைத்து பாகங்களையும் நொறுக்குகிறது. உங்களுடைய எதிர்கால பயணத்தை சீராக செல்வதற்கு  தடை கற் களைப்போட்டு சிதைக்கிறது கடன்வாங்கி முன்னேறிவிடலாமென்று ஒருபொழுதும் எண்ணாதீா்கள்.கடன் அட்டைகள் .தாவி தாவி சென்று விண்ணை எட்டிப் பிடிப்பதற்கு வழிகோலும் என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். வெறும் ,உங்களுடைய மூன்று மாத வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்கள் கொடுக்கின்ற அந்த அட்டைகள். 300 நாட்களுக்கு நம்மளுடைய நிம்மதியை தொலைப்பதற்கு அடித்தளம் விடுகின்றன. குடும்பம் என்று ஒன்றில் வாழும் பொழுது, அதற்குள்ளே பல்வேறு பிரச்சனைகள், நிதி சார்ந்து இருக்கக்கூடிய இயக்கங்கள் அடங்கியிருக்கின்றன .வீட்டு வாடகை லிருந்து பிள்ளையினுடைய படிப்பில் இருந்து அன்றாட தேவைகளில் இருந்து நாம் ஆசைப்பட்ட பொருள்களை வாங்குவதிலிருந்து இது சுற்றி சுற்றி சுழன்று கொண்டு தான்இருக்கும்; இருக்கிறது. வருமானமின்றி  இல்லை  வருமானம் ஓரளவு இருந்து அதற்கு மீறி நாம் செலவு செய்வதற்கு இந்த கடன் அட்டைகள்  தூண்டுகிற பட்சத்தில், நாம் நம்மை அடக்கிக் கொள்ள வேண்டும். நாம் நம்மை அடக்கிக் கொள்ளாவிட்டால், அந்தப் பொருள்கள் வீட்டுக்குள் வந்து நமக்கு தருகின்ற மகிழ்ச்சியை விட அந்தக் கடன் நமக்கு கொடுக்கப் போகின்ற துன்பம் அதிகம், அதிகம், அதிகம். அதனால் தேவையை அறிந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர தேவைக்கு மீறி நம்மளுடைய வாழ்க்கை போக்கை நாம் மாற்றிக் கொள்ளக் கூடாது. சந்தோஷமாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள் .ஆனால் ஆசைதான் அவர்களை அலைக்க்களிக்க செய்து அள்ளாட வைத்து விடுகிறது. ஆக, நீங்கள் முதலில் யோசிக்க வேண்டியது என்னன்னா இது நமக்குத் தேவைதானா? தேவை எனில் அதை தாராளமாக நீங்கள் வாங்கலாம் உங்களுடைய சக்திக்கு அப்பாற்பட்ட நிலையில் அது அமைந்து விட்டால் மிகப்பெரிய அபாயகரமான நிலைக்கு உங்களை அழைத்துச் செல்லும் என்பதை மறந்து விடாதீர்கள். நாளை பணம் வருகிறது. இல்லை, பணம் இன்னும் நிறைய வரப்போகின்றது. இந்த கடன் அட்டைகளை வைத்துக்கொண்டு ,நான் என்னுடைய உற்பத்திக்கு நான் பயன்படுத்தப் போகிறேன் என்று செய்வதில் ஒன்றும் தவறில்லை. அப்படி நிறைய பேர் தங்களுடைய வியாபாரத்தை வளர்த்துக் கொண்டவர்கள் உண்டு.. ஆனால், அவர்கள் கொடுத்த அந்த கால அவகாசத்திற்குள்ளே, கடன் அட்டையை பயன்படுத்தி,  பணத்தை செலுத்தி விட்டால் பிரச்சனை இல்லை. அதை செலுத்தாத பொழுது கடன் சுமை மேலும் மேலும் வருகிற பொழுது நாம் மூச்சு திணறலுக்கு ஆளாகும்நிலை வரும்.  தரவேண்டிய இடத்தில் சரியான நேரத்தில் பணம் வரவில்லை என்றால் வங்கிகள் சும்மா இருந்துவிடாது. அது வட்டிக்கு மேல் வட்டியை போட்டு நம்மளுடைய கழுத்தை நெரிக்க.... ஒரு சூழலையை தோற்றுவித்து விடும். வங்கிகள் சும்மா பணம் கொடுக்கவில்லை. அவர்களுடைய வாடிக்கையாளர்களிடம் இருந்து அவர்களுக்கு வட்டி தருகிறேன் என்று தான் அவர்கள் பணத்தை வாங்கி நம்மிடம் தருகிறார்கள் .அதனால் வங்கி அவர்களுடைய செயலில் சரியாக இருக்கிறார்கள் .வங்கியில் வந்து பணம் முளைத்து விடப் போவதில்லை .வானத்திலிருந்து குதித்து விடுவதில்லை .பலருடைய வைப்பு தான், சேமிப்பு தான் உங்களுக்கு கடனாக தரப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அந்த கடனை நீங்கள் சரியாக செலுத்தவில்லை என்றால், வங்கிகள் அவர்களுடைய சேமிப்பாளர்களுக்கு சரியாக வட்டி கொடுக்க முடியாமல் போய்விடும். அதனால், அவர்கள் நெருக்கடிகளை வேறு விதமான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்வது என்பது தவிர்க்க முடியாதாகிவிடுகிறது ஆக, நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். இப்பொழுது, இந்தப் பொருள் நமக்குத் தேவையா, கடன் வழியாக வாங்குகிறது என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் .அவ்வாறு முடிவு செய்யாமல், நீங்கள் கடன் அட்டைகளை வாங்கி, வாங்கி வைத்துக் கொண்டு இந்த கடன் அட்டையில் இந்த பொருள், அந்த கடன் அட்டையில் இந்த பொருள்  என்று வீட்டு நிறைய உங்களுடைய சந்தோஷத்தை மகிழ்ச்சியை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு நிரப்பினீர்கள் என்றால், தொடர்ச்சியாக பல்வேறு கைகள் உங்கள் கழுத்தை நெரிக்க வரும் என்பதை மறந்து விடாதீர்கள் .ஆசை தூண்டப்படுகிற பொழுது அதை கொஞ்சம் அடக்கி வையுங்கள் .நிம்மதியாக வாழலாம்

கடன் அட்டைகளை- கிரெடிட் கார்டுகளை வாங்கச் சொல்லி தினமும் பல்வேறு தொலைபேசி அழைப்புகள்
 

Tags :

Share via