இந்தப் பறவைகளை தொட்டால் மரணம் உறுதி

by Staff / 17-04-2023 05:07:51pm
இந்தப் பறவைகளை தொட்டால் மரணம் உறுதி

மனிதர்களால் விரும்பப்படும் உயிரினங்களில் ஒன்றுதான் பறவைகள். அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்பார்கள். அதற்கு ஏற்றார்போல், தொட்டால் சில நொடிகளில் கொல்லும் இரண்டு வகையான பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அந்தப் பறவைகள் தங்கள் இறகுகளில் விஷத்தை மறைத்து வைத்திருப்பதாக டேனிஷ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த விஷப் பறவைகள் ரீஜண்ட் விஸ்லர் (பச்சிசெபலா ஸ்லிகாகெல்லி) மற்றும் ரூஃபஸ்-நேப்ட் பெல்பேர்ட் (அலிட்ரியாஸ் ருஃபினுச்சா) இனத்தைச் சேர்ந்தவை எனத் தெரியவந்தது. அவை பெரும்பாலும் இந்த பசிபிக் பகுதியில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via