தாயின் சடலத்தை 4 நாட்கள் மறைத்து வைத்த மகன்

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நிகில் என்ற நபர் தனது தாய் சாந்திதேவி உடன் வசித்து வருகிறார். 82 வயதான சாந்திதேவி திடீரென உயிரிழந்த நிலையில், இறந்த தாயின் உடலை 4 நாட்களாக படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்துள்ளார் நிகில். துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்பு நிகிலிடம் விசாரணை நடத்தியதில், நிகில் மனநிலை சரியில்லாதவர் என்பது தெரிய வந்துள்ளது.
Tags :