படிக்காத மாணவர்களை அடித்த ஆசிரியர் பணி இடை நீக்கம்

தர்மபுரி அவ்வை நகரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் சதீஷ்குமார் என்பவர் மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என அடித்ததாக மாணவர்கள் பெற்றோரிடம் புகார் செய்துள்ளனர்.இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் பெற்றோர்கள் இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.புகாரைத்தொடர்ந்து நடந்த விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் சதீஷ்குமாரை தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Tags :