பாஜகவுடன் தொகுதிப் பங்கீடா? - குமாரசாமி மறுப்பு

by Staff / 09-09-2023 05:08:57pm
பாஜகவுடன் தொகுதிப் பங்கீடா? - குமாரசாமி மறுப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடனான கூட்டணியில் தொகுதிப்பங்கீடு குறித்து பேசவில்லை என, கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.குமாரசுவாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி, “பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு நடக்கவில்லை. தொகுதிப் பங்கீடு நடந்ததாக எடியூரப்பா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. பாஜக நிர்வாகிகளை சிலமுறை சந்தித்துள்ளோம். என்ன நடக்கப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via