ரயில் பயணத்தில் சுவையான புதிய உணவு வழங்க திட்டம்

by Staff / 16-11-2022 11:45:45am
ரயில் பயணத்தில் சுவையான புதிய உணவு வழங்க திட்டம்

இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகத்துக்கு (ஐ.ஆர்.சி.டி.சி) ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில்,"ரயில்வே வாரியம் அதன் கேட்டரிங் மற்றும் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி-க்கு உள்ளூர் மற்றும் பிராந்திய உணவு வகைகளையும், நீரிழிவு நோயாளிகள், கைக்குழந்தைகளுக்கு ஏற்ற உணவுகளையும் உள்ளடக்கும் வகையில் அதன் உணவு வகைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த உணவு வகைகளில் பருவகால சுவையான உணவுகள், பண்டிகை கால உணவுகள், விருப்பங்களுக்கு ஏற்ப உணவுப் பொருட்களும் உள்ளடங்கும். ஊட்டசத்து மிக்க உள்ளூர் தயாரிப்புகள் உள்பட பயணிகள் விருப்பத்திற்கேற்ப உணவுகளை தேர்ந்தெடுக்கும் வகையில் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via