ஐபிஎல் : ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Editor / 24-07-2021 08:27:32am
ஐபிஎல் : ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மும்பையில் நடைபெற்ற 18-வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 11 ரன்களிலும், நிதிஷ் ரானா 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தினேஷ்கார்த்திக் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது

இதையடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் 5 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சஞ்சுசாம்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சிவம் துபே 22 ரன்களும், ராகுல் தெவாட்டியா 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக 18.5 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

ஐபிஎல் : ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via