சமுதாய தலைவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்-ஸ்ரீதர்  வாண்டையார் பேட்டி.

by Editor / 27-10-2022 07:38:40pm
சமுதாய தலைவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்-ஸ்ரீதர்  வாண்டையார் பேட்டி.

மருதுபாண்டிய குருபூஜைக்கு வந்த தங்களை தடுத்து நிறுத்திய சிவகங்கை மாவட்ட எஸ்.பி,யை கண்டித்தும், அரசியல் கட்சி வாகனங்களுக்கு மட்டும் முன்னுரிமை தரும் மாவட்ட காவல் துறையை கண்டித்து நாட்டரசன்கோட்டை அருகே மூவேந்தர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில்  சாலை மறியல்.

சுதந்திரத்திற்காக போரிட்ட மருது பாண்டியர்களுக்கு சிவகங்கை பிரம்மாண்ட சிலை அமைக்க வேண்டும்,சிவகங்கையில் பி சி ஆர் வழக்குகளை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்,அரசியல் தலைவர்கள் அமைச்சர்கள் சீன் காட்டவே வந்து செல்கிறார்கள்.அரசியல்வாதிகள் அமைச்சர்களுக்கு கொடுக்கும் மரியாதையை போல் சமுதாய தலைவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் எங்களை மிரட்ட நினைக்கும் சிவகங்கை மாவட்ட எஸ்.பி.க்கு எச்சரிக்கை விடுத்து  மூவேந்தர் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஸ்ரீதர்  வாண்டையார் பேட்டி.

 

Tags :

Share via

More stories

Logo