ஹைபர் லூப் தொழில்நுட்பம் மூலம் அதி விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஹைபர் லூப் தொழில்நுட்பம் மூலம் அதி விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒரு மணி நேரத்தில் ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடிய இந்த ரயிலானது காந்த அலைகள் மூலம் இயக்கப்படுகின்றது. 40 பேர் பயணப்படக் கூடிய வகையில் பைப் குழாய் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அதிவேக ஹைப்பர் லூப் தொழில்நுட்பத் திட்டம், சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையமும் ஐ.ஐ.டி மாணவ குழுவினரும் இணைந்து நடைமுறைப்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. .
. இத்திட்டத்தை, சென்னை விமான நிலையத்திலிருந்து பரந்தூர் விமான நிலைய வரை செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற் கொண்டுள்ளனர்.குறைந்த அழுத்த குழாய்களின் காந்தத்தில் இழுக்கும் சக்தியின் மூலம் ரயிலை இயக்கும் தொழில்நுட்பம் ஹைப்பர் லூப் ரயில் சேவை. இது விமானத்தை விட விரைவு ரயிலை விட அதிக வேகம் கொண்டது. இதற்கு என்று தண்டவாள வழித்தடம் தேவையில்லை. இதற்காக செங்கல்பட்டு தையூரில் தனியாக ஒரு வழித்தடத்தை சென்னை ஐ..ஐடி மாணவர்கள் செய்துள்ளனர்.. இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து தம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மும்பை புனே இடையே ஹைபர் லூப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதே போல் பஞ்சாப் அமிர்தசரத்தில் இருந்து சண்டிகார் வரை இப்பணிகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Tags :