கர்நாடக சட்டமன்ற தேர்தல் பாஜகவிற்கு அதிமுக ஆதரவு 

by Editor / 03-05-2023 12:17:21am
கர்நாடக சட்டமன்ற தேர்தல் பாஜகவிற்கு அதிமுக ஆதரவு 

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது. சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு குறித்து அம்மாநில அதிமுகவினர் தயக்கம் காட்டி வந்தனர். இந்நிலையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிற்கு இணங்க கர்நாடகா தேர்தல் பொறுப்பாளரும் தமிழ்நாடு பாஜக தலைவருமான அண்ணாமலையை சந்தித்து கர்நாடகா செயலாளர் எஸ்.டி குமார் ஆதரவை தெரிவித்தார்.

 

Tags :

Share via