நகை மற்றும் பணத்திற்காக இரட்டை கொலை:இரண்டு பேர் கைது-போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு

by Editor / 03-05-2023 12:22:00am
நகை மற்றும் பணத்திற்காக இரட்டை கொலை:இரண்டு பேர் கைது-போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் செட்டிநாடு கன்ஸ்ட்ரக்சன் எனும்‌ பெயரில்  கட்டுமான நிறுவனத்தை சொந்தமாக  நடத்தி வந்தார். இவருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ள நிலையில் இவருடைய நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் 23 ம் தேதி இரவு அவரும் அவருடைய தாயாருமான சிகப்பு என்பவரும் அடித்து படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் பொன்னமராவதி பகுதியையே உலுக்கியது. இந்நிலையில் நகை பணத்திற்காக கொலை செய்யப்பட்டனரா அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் சுமார் ஐந்து தனி படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் சந்தேகத்திற்கு இடமாக இடையபுதூர் பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் கல்லங்களாபட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்தி மற்றும் தேவகோட்டை அருகே மாவலி கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ் ஆகியோர்களை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை செய்த பொழுது அவர்கள் வேந்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இன்ஜினியர் பழனியப்பன் மற்றும் அவரது அம்மா சிகப்பி  ஆகியோனரை  நகை மற்றும் பணத்திற்காக கொலை செய்ததை கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.மேலும் இவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீசார் மீட்டனர்.
இதுகுறித்து கூடுதல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் விசாரிக்கையில் கொலை செய்தவர்கள் இன்ஜினியர் பழனிப்பனிடம் வேலையாட்களுக்கு சம்பளம் போடுவதற்காக வெள்ளி சனிக்கிழமைகளில் அதிக பணம் புழங்குவதை  நோட்டம் செய்துள்ளனர்.மேலும் அவர்கள் இதற்கு முன்பு இரண்டு முறை திருட முயற்சி செய்ததாக குற்றவாளிகள் தெரிவித்ததாக கூறினார்.

நான்கு மாதங்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு  பிறகு இரட்டை கொலை செய்த கொலையாளிகளை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ரமேஷ்,கிருஷ்ணன் மற்றும் பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் மற்றும் தனிப்படை போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர். வரும் காலங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவோம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via